மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 25.04.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 25/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 25.04.2022 அன்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 201KB)
மேலும் பலமாண்புமிகு தமிழக ஆளுநர் தலைமையில் இரண்டு நாள் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 25/04/2022உதகை ராஜ்பவனில் மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைகழகங்களின் இரண்டு நாள் துணைவேந்தர்கள் மாநாடு மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.R.N.ரவி அவர்கள் தலைமையில் 25.04.2022 அன்று நடைபெற்றது.
மேலும் பலபஞ்சாயத்து ராஜ் தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்பு
வெளியிடப்பட்ட நாள்: 24/04/2022கோயம்புத்தூர் மாவட்டம் எஸ் எஸ் குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 24.04.2022 அன்று பஞ்சாயத்து ராஜ் தின உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் , பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர். (PDF 70.1KB)
மேலும் பலமண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கோயம்பத்தூரில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 23/04/2022கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பூ சா கோ பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் 23.04.2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு.கே. நந்தகுமார் இ.ஆ.ப அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் , மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் […]
மேலும் பலகட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு நிதி உதவி தொகை வழங்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2022தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் வீடு கட்டுவதற்கு நிதி உதவி தொகையாக ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 48.7KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டத்திற்க்கு 2021-22ம் ஆண்டுக்கான குறு சிறு நிறுவனங்களுக்கு தாமத பண பட்டுவாடா திட்டத்தை திறன்பட செயல்படுத்தியதற்கான விருது வழங்கப்பட்டது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2022கோயம்புத்தூர் மாவட்ட குறு சிறு நிறுவனங்களுக்கான வசதியாக்க குழு மூலம் கடந்த 2021-22ம் ஆண்டில் குறு சிறு நிறுவனங்களுக்கு தாமத பண பட்டுவாடா திட்டத்தை திறன்பட செயல்படுத்தியதற்கான விருதினை மாண்புமிகு மத்திய அமைச்சர் நாராயண தத் ரானே அவர்கள் 20.04.2022 அன்று டெல்லியில் வழங்கினார் -பத்திரிகைச் செய்தி (PDF 42.9KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2022கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் பெள்ளேபாளையம் ஊராட்சியில் 20.04.2022 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 28KB)
மேலும் பலஉலக ஒவிய தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கான ஓவிய பயிற்சி முகாம் கோயம்பத்தூரில் நடைபெற்றது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2022தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் உலக ஒவிய தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கான ஓவிய பயிற்சி முகாம் கோயம்பத்தூரில் 17.04.2022 அன்று நடைபெற்றது -பத்திரிகைச் செய்தி (PDF 245KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ‘நான் முதல்வன்’ நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 19/04/2022கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 19.04.2022 அன்று பள்ளி மாணவியர்களுடன் கலந்துகொண்டார்.
மேலும் பலஉடல் உறுப்புதானம் செய்தவரின் தாய் மற்றும் உறவினர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்
வெளியிடப்பட்ட நாள்: 18/04/2022கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை முடிஸ் நகரைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்ததையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 18.04.2022 அன்று அவரது தாய் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் மற்றும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஹரிஹரனின் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். (PDF 26KB)
மேலும் பல