மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 18.04.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 18/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 18.04.2022 அன்று பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 28.9KB)
மேலும் பலசுற்றுலாத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக பாரம்பரிய நடன ஓவிய புகைப்படங்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2022கோயம்புத்தூர் விமான நிலையத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக பாரம்பரிய நடன ஓவியங்களின் புகைப்படங்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன் அவர்கள் 17.04.2022 அன்று திறந்து வைத்து பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். (PDF 42.4KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஓராண்டில் 1,00,000 விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி.ஆர்.நடராஜன் அவர்கள் மற்றும் பலர் 16.04.2022 அன்று கோவை சரவணம்பட்டி கேஜிஐஎஸ்எல் கல்லூரி வளாகத்தில் பங்கேற்றனர்.
மேலும் பலஉலக ஹீமோபீலியா தின விழா நிகழ்ச்சி மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2022கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைப்பெற்ற உலக ஹீமோபீலியா தின விழா நிகழ்ச்சி மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் 16.04.2022 அன்று நடைபெற்றது. (PDF 51.6KB)
மேலும் பலகோவை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு சிறந்த இலச்சினையினை வடிவமைத்து தருபவருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2022கோவை புத்தகத் திருவிழா கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு சிறந்த இலச்சினையினை (LOGO) வடிவமைத்து தருபவருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 166KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவ கட்டமைப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 14/04/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவ கட்டமைப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக 14.04.2022 அன்று திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு.சண்முகசந்தரம் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். (PDF 30.6KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
வெளியிடப்பட்ட நாள்: 14/04/2022டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு.சண்முகசந்தரம் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை 14.04.2022 அன்று மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர்.
மேலும் பலகோவை விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பாராவிளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2022கோயம்புத்தூர் மாவட்டம் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுரியில் கோவை விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பாராவிளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும் பலகோயம்புத்தூர் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய அளவிலான எரி பொருள் சிக்கனத்தில் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2022தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர் கோட்டத்துக்கு தேசிய அளவிலான எரி பொருள் சிக்கனத்தில் இலக்கை எட்டி சாதனை புரிந்ததற்காக 2 இலட்சத்திற்கான பரிசுத் தொகையும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை பெட்ரோலியத்துறை அமைச்சரக செயலர் திரு. பங்கஜ் ஜெயின் அவர்கள் கோவை மேலாண்மை இயக்குநர் திரு. ஆ.ஆறுமுகம் அவர்களிடம் வழங்கினார் -பத்திரிகைச் செய்தி
மேலும் பலகோவிட்-19 இறப்பிற்கு கருணைத்தொகை பெற மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதல் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2022கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் கருணைத்தொகை பெற மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதலின்படி உரியகாலத்தில் மனுசெய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 38.5KB)
மேலும் பல