இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027 | கோயம்புத்தூர் மாவட்டத்தில், இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டமான வீடுகள் பட்டியலிடல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு (HLO) நடைபெறவுள்ளன. பொதுமக்கள் 17.07.2026 முதல் 31.07.2026 வரை https://se.census.gov.in இணையதளம் மூலம் சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) செய்து கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து 01.08.2026 முதல் 30.08.2026 வரை கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வார்கள். சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த பின்னர் கிடைக்கும் 12 இலக்க எண்ணை பாதுகாப்பாக வைத்திருந்து, கணக்கெடுப்பாளரிடம் வழங்கி விவரங்களை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெறுவதால், கோயம்புத்தூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் சுய கணக்கெடுப்பில் பங்கேற்று, கணக்கெடுப்பு பணிக்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. |
13/07/2026 | 30/08/2026 | பார்க்க (235 KB) |