அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – அறிவிப்பு | கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், 23.08.2025 அன்று காலை 8 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரியில் அமைந்துள்ள இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த 250-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக 15000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் தனியார்துறை வேலைவாய்ப்பு குறித்த தகவல்களுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. |
14/08/2025 | 23/08/2025 | பார்க்க (195 KB) |
முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் விபரம் | முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்-18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் விபரம் |
05/05/2025 | 05/05/2026 | பார்க்க (854 KB) List-2 (1 MB) List-3 (2 MB) |
ஒருவழிச் சாலைகளின் விவரங்கள் – கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2025 | ஒருவழிச் சாலைகளின் விவரங்கள் – கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2025 |
31/01/2025 | 31/12/2026 | பார்க்க (1,017 KB) |