Close

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாம் தளம்,
கோயம்புத்தூர்.

e-mail: dbcwocbe@gmail.com
தொலைபேசி: 0422-2300404

ந.முருகேசன் பி.எஸ்.சி., பி.எட்.,எம்.ஏ.,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்

விடுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 26 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

விடுதியில் வழங்கப்படும் வசதிகள்

  1. விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களின் பொது அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொறு விடுதிக்கும் தினந்தோறும் இரண்டு தமிழ் நாளிதழ்கள் மற்றும் ஒர் ஆங்கில நாளிதழ் வழங்கப்படுகின்றன.
  2. 10-ஆம் வகுப்பு மற்றும்12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு அரசுப்பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படுகின்றன.
  3. நான்காம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு நான்கு இணை சீருடைகள் வழங்கப்படுகின்றன.
  4. 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூ ரி இறுதியாண்டு பயிலும் விடுதி மாணவ/மாணவியர்களுக்கு   வேலைவாய்ப்பு பெறும் பொருட்டு  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வாழ்க்கை வழிகாட்டி நெறிமுறை பயிற்சி அளிக்கப்படுகின்றன.
  5. ஆண்டுக்கு மூன்று முறை விடுதி மாணவ, மாணவியருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
  6. கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிக்கு இரண்டடுக்கு கட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது.
  7. விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மாணவ/மாணவியர்களின் நலனுக்காகஆண்டுதோறும் பாய்கள் வழங்கப்படுகின்றன .
  8. விடுதியில் தங்கி கல்லூ ரி முதலாமாண்டு பயிலும் மாணவ/மாணவியர்களின் நலனுக்காகஆண்டுதோறும் ஜமுக்காளங்கள் வழங்கப்படுகின்றன.
  9. விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூ ரி  மாணவ/மாணவியர்களின் நலனுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள் வழங்கப்படுகின்றன.
  10. கல்லூ ரி விடுதியில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் மின்- நூலகம் அமைந்துள்ளது.

 

தகுதிகள்

  1. பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம ரூ.2.00இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  2. பள்ளிகளில் 4 முதல் 12 வரை  பயிலும் மாணவ,மாணவியர்கள் மற்றும் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு பாலிடெக்னிக் , தொழிற்கல்வி /தொழில் நுட்பக்கல்வி பயில்பவர்கள்.

கல்வி உதவித்தொகை திட்டங்கள்

பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பட்டயப்படிப்பு,  தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் பிவ, மிபிவ(ம)சீரமரபினர் நல மாணவ/மாணவியர்கள்சுயநிதி தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நிபந்தனைகள்  

  1. பிவ,மிபிவ, சீம வகுப்பைச்சார்ந்த மாணவ மாணவியராக இருக்க வேண்டும்
  2. பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்

.இலவசக்கல்வி உதவித்தொகை திட்டம்

1.அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் / மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் பிவ, மிபிவ(ம) சீர்மரபினர் நல மாணவ/மாணவியர்கள்

2 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில் நுட்ப பயிலகங்களில் மூன்றாண்டு பட்டயப்படிப்பு பயிலும் பிவ, மிபிவ(ம) சீர்மரபினர் நல மாணவ/மாணவியர்கள்

  1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில் கல்லூரிகள் மற்றும் சுயநிதி தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவ/மாணவியர்கள்

நிபந்தனைகள்

1.,மிபிவ, சீம வகுப்பைச்சார்ந்த மாணவ மாணவியராக இருக்க வேண்டும்

  1. பெற்றோர்களது ஆண்டு வருமானம்ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்

 

விலையில்லா சலவைப்பெட்டிகள் வழங்குதல்

  • பிவ,மிபிவ, சீம வகுப்பைச்சார்ந்த, சலவைத் தொழிலை மேற்கொள்பவர்களாக இருக்க வேண்டும்
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ..1,,00,000/-மிகாமல் இருத்தல் வேண்டும்
  • நடப்பாண்டில் 53 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது

மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல்

  1. பிவ,மிபிவ, சீம வகுப்பைச்சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்
  2. தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்
  3. வயது 20 – 45 வரை
  4. குடும்ப ஆண்டு வருமானம் ரூ..1,,00,000/-மிகாமல் இருத்தல் வேண்டும்
  • நடப்பாண்டில் 100 பயனாளிகளுக்கு மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டம்

கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பொறும் பள்ளிகளில் பயிலும்  மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த, பெற்றோர்களது ஆண்டுவருமானம்  வரம்பு ரூ.1,00,000/- க்குள் அமைந்துள்ள, மூன்றாம் வகுப்பு வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.500/- வீதமும் 6 ஆம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1000/- வீதமும்  ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

சீர்மரபினர் நல வாரியம்

தகுதிகள்

  • சீரமரபினர் இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  • வயது 18 முதல்  60 –வயதுக்குள் இருக்க வேண்டும்.

சீர்மரபினர்  நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும்  நலத் திட்ட உதவிகள்

  1. விபத்து ஈட்டுறுதி
  2. கல்வி உதவித்தொகை
  3. திருமண உதவித்தொகை
  4. மகப்பேறு உதவித்தொகை
  5. முதியோர் ஓய்வூதியம்
  6. இயற்கை மரண உதவித்தொகை
  7. மூக்கு கண்ணாடி செலவுத்தொகை

டாப்செட்கோ   (தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார  மேம்பாட்டுக்கழகம்)

ஏழை பிவ,மிபிவ, சீம வகுப்பைச்சார்ந்தவர்கள் சுய தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றிக்கொள்வதற்காக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

1.சிறு வணிகம்ஃவர்த்தகம்

2.விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள்

3.போக்குவரத்து துறை

4.கைவினைப்பொருட்கள் மற்றும் மரபு வழிச் சார்ந்த தொழில்கள்

5.இளம் தொழில் முனைவோருக்கான சுய வேலைவாய்ப்பு

தகுதிகள்

  1. பிவ,மிபிவ, சீம வகுப்பைச்சார்ந்த மாணவ மாணவியராக இருக்க வேண்டும்
  2. பெற்றோர்களது ஆண்டுவருமானம் வரம்பு ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்

3.பயனடைவோரின் வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்

4.ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும்

சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதி அமைக்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம்

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர்,  மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்புகளைச் சார்ந்த  சிறு, குறு விவசாயிகளுக்கு நீர் பாசன வசதிகள் அமைப்பதற்காக அதிகபட்சம் ரூ.1,00,000- வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி  ஏற்படுத்திக்கொள்ள அதிகபட்சம் 50விழுக்காடு அரசு  மானியமாக அல்லது அதிகபட்சம் ரூ.50,000 – வரை மானியமாக அரசு வழங்கும்.

 

விலையில்லா மிதிவண்டி

  • அரசு/அரசு உதவி பெறும் மற்றும் பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் வகுப்பு பயிலும் பிவ, மிபிவ, சீம மாணவ/மாணவிகளுக்கு ஆண்டுதோறும்  விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

 

வீட்டுமனைப்பட்டா

வீடற்ற பிவ, மிபிவ, சீம  மற்றும் சிறுபான்மையினவகுப்பைச் சார்ந்த ஏழை மக்களுக்கு கட்டுவதற்காக விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது.

 

தகுதிகள்

  1. பிவ, மிபிவ, சீம மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  2. ஆண்டு வருமானம் ரூ.1,00,000 /-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

 

  • நடப்பாண்டில் 716 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

விடுதியின் விவரங்கள்

 

.எண் விடுதி அமைந்துள்ள வட்டத்தின் பெயர் விடுதியின் பெயர்
1. பேரூர் அரசு கல்லூரி மாணவர் விடுதி, பேரூர்
2. கோயம்புத்தூர் தெற்கு அரசு கல்லூரி மாணவர் விடுதி பீளமேடு
3. கோயம்புத்தூர் தெற்கு அரசு கல்லூரி மாணவர் விடுதி சிங்காநல்லூர்
4. கோயம்புத்தூர் வடக்கு அரசு கல்லூரி மாணவர் விடுதி வெள்ளக்கிணர்
5. கோயம்புத்தூர் வடக்கு அரசு கல்லூரி மாணவர் விடுதி  நாயக்கன்பாளையம்
6. கோயம்புத்தூர் வடக்கு அரசு தொழிற்பயிற்சி மாணவர் விடுதி  கவுண்டம்பாளையம்
7. பொள்ளாச்சி அரசு கல்லூரி மாணவர் விடுதி கிணத்துக்கடவு @ பொள்ளாச்சி
8. கோயம்புத்தூர் வடக்கு அரசு கல்லூரி மாணவியர் விடுதி  கோயம்புத்தூர்
9. மேட்டுப்பாளையம் அரசு பள்ளி மாணவர் விடுதி  மேட்டுப்பாளையம்
10. மேட்டுப்பாளையம் அரசு பள்ளி மாணவர் விடுதி  காரமடை
11. மேட்டுப்பாளையம் அரசு பள்ளி மாணவர் விடுதி  வெள்ளியங்காடு
12. அன்னூர் அரசு பள்ளி மாணவர் விடுதி, எஸ்.எஸ்.குளம்
13. சூலூர் அரசு பள்ளி மாணவர் விடுதி  சூலூர்
14. மேட்டுப்பாளையம் அரசு பள்ளி மாணவர் விடுதி  ஆனைமலை@ புஜங்கனூர்
15. மேட்டுப்பாளையம் அரசு பள்ளி மாணவியர் விடுதி  சீளியூர்
16. அன்னூர் அரசு பள்ளி மாணவியர் விடுதி  சொக்கம்பாளையம்
17. பொள்ளாச்சி அரசு பள்ளி மாணவியர் விடுதி  பொள்ளாச்சி
18. பேரூர் அரசு பள்ளி மாணவியர் விடுதி  ஆலாந்துறை(DNC)
19. கோயம்புத்தூர் தெற்கு அரசு பள்ளி /கல்லூரி மாணவியர் விடுதி  மசக்காளிபாளையம்(Minority)
20. பேரூர் அரசு கல்லூரி மாணவர் விடுதி, தொண்டாமுத்தூர்(Mbc)
21. ஆனைமலை அரசு கல்லூரி மாணவர் விடுதி  கோட்டூர்(Mbc)
22. அன்னூர் அரசு பள்ளி மாணவர் விடுதி  சொக்கம்பாளையம்(Mbc)
23. மேட்டுப்பாளையம் அரசு பள்ளி மாணவர் விடுதி  பெத்திக்குட்டை(Mbc)
24. சூலூர் அரசு பள்ளி மாணவர் விடுதி ஓடக்கல்பாளையம் (Mbc)
25. அன்னூர் அரசு பள்ளி மாணவியர் விடுதி சொக்கம்பாளையம்(Mbc)
26. கோயம்புத்தூர் வடக்கு அரசு பள்ளி மாணவியர் விடுதி  சின்னத்தடாகம்( Mbc)