Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
பதிவுரு எழுத்தர் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கோவை மாவட்ட , நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

18/06/2026 09/07/2026 பார்க்க (83 KB) விண்ணப்பம் (53 KB)
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – 2026

சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பான சேவையாற்றி வரும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.

15 முதல் 35 வயதுக்குட்பட்ட 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் இவ்விருதிற்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்விருதில் ரூ.1,00,000 ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.

அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, 15.08.2026 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

08/06/2026 06/07/2026 பார்க்க (259 KB)
சட்ட அலுவலர்கள் நியமனம் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அரசு, கடித எண் 9987/Cts.VIA/2026-1, தேதி 01.06.2026 மூலம், காலவரையறை அடிப்படையில் சட்ட அலுவலர்களை (Law Officers) நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் காலவரையறை அடிப்படையில் நிரப்பப்பட உள்ள  சட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்காக, உரிய சரிபார்ப்பிற்குப் பிறகு வழக்கறிஞர்களின் விண்ணப்பங்களுடன் அவர்களின் பெயர் பட்டியலை  அனுப்புமாறும் கோரியுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞராக  குறைந்தது ஏழு ஆண்டுகள் அனுபவமுள்ள வழக்கறிஞர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் முதலில் 25.06.2026 அன்று மாலை 6.00 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மேலும் 05 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட கடைசி நாள் மற்றும் நேரம் 30.06.2026 அன்று மாலை 6.00 மணி ஆகும்.

மேற்கண்ட தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவிதத்திலும் பரிசீலிக்கப்படாது; அவை உடனடியாக நிராகரிக்கப்படும்.

08/06/2026 30/06/2026 பார்க்க (241 KB) அறிவிப்பில் செய்யப்பட்ட திருத்தம் (200 KB)
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், காலியாக உள்ள தற்காலிகமானபதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் உள்ள, கோயம்புத்தூர் மாநகராட்சி, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி (ம) அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள Medical Officer(UHWC)-11, Health Inspector GrII (UHWC)-09, Staff Nurse(UHWC)-08, ULB-UHN-85, Health Inspector GrII(MTM)-11, Mid Level Health Provider(MLHP)-03, Data Manager(IDSP)-01, Programme cum Administrative Assistant-01, Cleaner-03, Multipurpose Hospital Worker-13, Dental Technician (DEIC)-1, Optometrist(DEIC)-1, Occupational Therapist(DEIC)-1, Sanitary Worker(SNCU)-2, CEmONC Security Guard-2 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

22/05/2026 15/06/2026 பார்க்க (273 KB) விண்ணப்பம் (107 KB)
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

12/05/2026 02/06/2026 பார்க்க (317 KB)
முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் விபரம்

முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்-18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் விபரம்

05/05/2025 05/05/2026 பார்க்க (854 KB) List-2 (1 MB) List-3 (2 MB)
அத்தியாவசிய பணியாளர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு

தேர்தல் நாளன்று அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் வாக்கு பதிவு செய்ய வசதியாக ஒவ்வொரு தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் 17.04.2026, 18.04.2026 மற்றும் 19.04.2026 ஆகிய தேதிகளில் Postal Voting Centre அமைத்து நேரடியாக தங்களது வாக்குகளை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. படிவம் 12D அளித்துள்ள அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மேற்கண்ட தினங்களில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

13/04/2026 19/04/2026 பார்க்க (59 KB)
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வீட்டிலிருந்தவாறே வாக்கு பதிவு

மூத்த குடிமக்கள் (ம) மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தவாறே வாக்கு பதிவு செய்ய வசதியாக வாக்கு பதிவு அலுவலர்கள் நேரடியாக தங்களது இல்லத்திற்கு 12.04.2026, 13.04.2026 மற்றும் 14.04.2026  தேதிகளில் வர உள்ளனர். படிவம் 12D அளித்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் அன்றைய தினம் தங்களது இல்லத்தில் இருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

08/04/2026 14/04/2026 பார்க்க (126 KB)
மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அழப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள முற்றிலும் தற்காலிகமான ஆய்வக நுட்புநர், கணக்காளர், காசநோய் சுகாதார பார்வையாளர் மற்றும் ஓட்டுநர் பதவிகளுக்கு ஒப்பந்த அழப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

03/03/2026 10/03/2026 பார்க்க (659 KB)
BLO கிட்களை வழங்குவதற்கான டெண்டர்கள் அறிவிப்பு

எதிர்வரும் வாக்காளர் பட்டியல் “சிறப்பு தீவிர திருத்தம் – 2026”-னை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கும் ஒரு BLO (Booth Level Officer) கிட் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த கிட் பை, பதிவேடு, எழுதுபொருட்கள், தொப்பி மற்றும் திருத்தப் பணியின் போது தேவைப்படும் பிற அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

13/09/2025 19/09/2025 பார்க்க (485 KB)