ஊடக வெளியீடுகள்

Filter by:
PR.NO.04 - HONBLE SOCIAL WELFARE MINISTER EVEN 001

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆதரவற்ற பெண்களுக்கான தங்கும் விடுதி மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபஞ்ச அமைதி ஆசிரமம், ஆதரவற்ற பெண்களுக்கான தங்கும் விடுதி மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கு. ஜெகதீஸ்வரி அவர்கள் இன்று (01.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 231KB)    

படங்கள் ஏதும்  இல்லை

செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் விடுபட்ட ஆவணங்களை அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு மொத்தம் 686 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 16 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாக கண்டறியப்பட்டுள்ளன. மீதமுள்ள 670 விண்ணப்பங்களில் 161 விண்ணப்பங்களில் சான்றிதழ்கள்/ஆவணங்கள் விடுபட்டுள்ளன. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள், விடுபட்டுள்ள சான்றிதழ்கள்/ஆவணங்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை 03.10.2026 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (PDF 300KB)

படங்கள் ஏதும்  இல்லை

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்முடி மற்றும் மேல்முடி கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பையும், வனச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 30.09.2026 அன்று மாவட்ட அளவிலான இணையவழி ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்முடி மற்றும் மேல்முடி கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதையொட்டி, பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன: பெருமாள்முடி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாங்கரை சோதனைச் சாவடி வழியாகவும், மேல்முடி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் பாலமலை […]

படங்கள் ஏதும்  இல்லை

கோட்டூர் மற்றும் ஆனைமலையில் 01.10.2026 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கோவை மண்டலத்தின் கீழ் கோட்டூர் மற்றும் ஆனைமலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 01.10.2026 முதல் செயல்பட உள்ளன. இவை காலை 9.30–மதியம் 1.30 மணி மற்றும் பிற்பகல் 2.30–மாலை 6.30 மணி வரை செயல்படும். சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750 மற்றும் பொதுரக நெல்லுக்கு ரூ.2,600 வழங்கப்படும். விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல், ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் கொள்முதல் நிலையங்களில் e-DPC மூலம் இலவசமாக பதிவு செய்யலாம். […]

படங்கள் ஏதும்  இல்லை

அக்டோபர் 1-ஆம் தேதி கோயம்புத்தூர் கிழக்கு வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து 25 இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 01.10.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, கோயம்புத்தூர் கிழக்கு வட்டம், சிங்காநல்லூர், திருச்சி சாலையில் உள்ள வெங்கட லட்சுமி கல்யாண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் […]

படங்கள் ஏதும்  இல்லை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட விழிப்புணர்வு முகாம்கள்

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளிம்புநிலை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின், குறிப்பாக படித்த இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தவும், அதிக அளவில் பெண்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கவும், தாட்கோ சார்பில் மாவட்டத்தின் 162 குக்கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாம்களில் தொழில்முனைவோருக்கான கடனுதவி, சுயவேலைவாய்ப்புப் பயிற்சி, கல்விக் கடனுதவி, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், தாட்கோ, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம் மற்றும் வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் […]

படங்கள் ஏதும்  இல்லை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடல்

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் (FL1), பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் (FL2), நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் (FL3), தமிழ்நாடு ஹோட்டல் (FL3A), சுற்றுலாத்துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள் (FL3AA) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் உரிமத்தளங்கள் (FL11) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களும் 02.10.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மூடப்பட்டிருக்க (Dry Day) உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் விதிமுறைகளுக்கு […]

PR.NO.91 - SOCIAL JUSTICE HOSTEL INSPECTION 001

கோயம்புத்தூரில் அரசு கல்லூரி மாணவர் சமூகநீதி விடுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026

கோயம்புத்தூர் மாவட்டம், டாக்டர் பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள அரசு கல்லூரி மாணவர் சமூகநீதி விடுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 215KB)  

படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயில் இருந்து பாதுகாத்திட, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சினையுற்ற ஆடுகள் தவிர, 4 மாத வயதிற்கு மேல் உள்ள அனைத்து ஆடுகளுக்கும்  ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது. (PDF 227KB)

படங்கள் ஏதும்  இல்லை

செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 7 வரை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

கோயம்புத்தூர் இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 25.09.2026 முதல் 07.10.2026 வரை அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது. (PDF 224KB)