12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் மருத்துவ முகாம்
தேசிய கைத்தறி தினமானது, கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், பொதுமக்களால் நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை போற்றும் வகையிலும், உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கைத்தறி நெசவுத் தொழில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய தொழிலாக விளங்கி வருகிறது. இத்தொழில் ஏராளமான நெசவாளர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு (07.08.2026), கைத்தறித் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சியும், பொள்ளாச்சி வட்டம், வதம்பச்சேரி பகுதியில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது.