கோயம்புத்தூரில் ரூ.9.22 கோடி மதிப்பிலான அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக ரூ.9.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத் குமார் அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்து, வகுப்பறை மற்றும் ஆய்வகங்களை பார்வையிட்டார்.
(PDF 222KB)
