கோவை குற்றாலம்
வழிகாட்டுதல்கோவை குற்றாலம், சிறுவானி மலைத்தொடர்களில் தோன்றும் மென்மையான நீர்வீழ்ச்சியுடன் அழகிய இடமாக உள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் நகரத்தின் மேற்கே மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த நீர் வீழ்ச்சியை மேல் பகுதி சிறுவானி அணை உள்ளது இது மாநிலத்தின் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்திட வனத்துறை அனுமதிக்க வேண்டும். நகரிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது, இந்த பகுதி மாலை 5 மணிக்கு பின் அனுமதி இல்லை. கோயம்புத்தூருக்கு மிகஅருகாமையில் உள்ள ஒரே நீர்வீழ்ச்சி இது.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
43.8 கி.மீ தொலைவில் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
தொடர்வண்டி வழியாக
30 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் ரயில்வே சந்திப்பு அமைந்துள்ளது.
சாலை வழியாக
32 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் பேருந்தது அமைந்துள்ளது.