Close

வேளாண்மைத்துறை

வேளாண்மைத்துறை

மாவட்ட பொருளாதாரம் மிக அதிக அளவில் விவசாயத்தை சார்த்துள்ளது, ஏனெனில் மக்கள் தொகையில் 30 சதவீத மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேளாண் மற்றும் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பளவு 177313 (ஹெக்டர்), இதில் நிகர பகுதி விதைப்பு 173599 (ஹெக்டர்) மற்றும் பல போகமாக 3714 (ஹெக்டர்):

இம்மாவட்ட விவசாயிகள் மாறிவரும் தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் முன்னோடியாக விளங்குவதால், வேளான் உற்பத்தியில் இம்மாவட்டம் எப்போதுமே முன்னோடி மாவட்டங்களுள் ஓன்றாக விளங்குகிறது.

விவசாய உற்பத்தியை உயர்த்தவேண்டி பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியும் , அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தும் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான சவாலை விவசாயத்துறை திறமையாக எதிர் கொள்கிறது. விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம் அவர்களுடைய பொருளாதார நிலைமையை மேம்படுத்த, ஏற்கனவே உள்ள பயிர் சுழற்சி மற்றும் பயிர் பரவலாக்கல் தொழில் நுட்பங்களுடன், கூடுதலாக தீவிரமான ஒருங்கினைந்த வேளாண்மை-NMSA, பயனற்ற நில மேலாண்மை திட்டம், நீடித்த வறட்சி நில வேளாண்மை, கூட்டு பண்ணையம், விரிவான நீர்வடிநிலப்பகுதி வளர்ச்சி செயல்பாடுகள், நுன்நீர்பாசனம் மூலமாக நீர் மேலாண்மை, பசுமை உரங்கள், உயிர் உரங்கள் மூலம் மண் வளம் வளர்ச்சி, நீடித்த கரும்பு விவசாய வளர்ச்சி முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை, ஒருங்கினைந்த சத்து மேளாண்மை மேற்கொள்ளல்(INM) , ஒருங்கினைந்த பூச்சி மேலாண்மை(IPM), போன்ற தொழில் நுட்பங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அதிக முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படுகிறது.