தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் , கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்ததையடுத்து விவசாயிகளுக்கு அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் 08.07.2024 அன்று இயற்கை வளங்கள் துறையின் சார்பில் நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் மற்றும் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்த நேரலை நிகழ்ச்சியில் , காணொலி காட்சி வாயிலாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் கனிம வளத்துறை இணை இயக்குநர் திரு.சரவணன், துணை இயக்குநர் திரு.ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி.மல்லிகா, வருவாய் கோட்டாட்சியர் திரு.கோவிந்தன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் திரு.சந்திரன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். (PDF 260KB)