முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – 2026
வெளியிடப்பட்ட தேதி : 06/06/2026
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ரூபாய் 1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” எதிர்வரும் 15.08.2026 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. (PDF 259KB)