வெள்ளியங்காடு கிராமத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம்
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், வெள்ளியங்காடு கிராமம், பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில், 12.08.2026 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, 05.08.2026 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில், அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில், வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) அவர்கள் வெள்ளியங்காடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளார்.
பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை எழுதி வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) அவர்களிடம் வழங்கலாம். மேலும், வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு), மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மற்றும் வெள்ளியங்காடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் மனுக்களை வழங்கலாம்.
பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்யப்பட்டு, 12.08.2026 அன்று வெள்ளியங்காடு கிராமம், பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
எனவே, இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.