Close

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 100% e-KYC கைரேகைப் பதிவை நிறைவு செய்ய சிறப்பு முகாம்கள்

வெளியிடப்பட்ட தேதி : 06/08/2026

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.12 சதவீதமும், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் 90.09 சதவீதமும் கைரேகை பதிவு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட கைரேகை (eKYC) பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதால், மேற்கண்ட குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்களில் கைரேகை பதிவு விடுபட்டுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைக்கோ அல்லது அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கோ சென்று கைரேகை பதிவு செய்து கொள்ளலாம்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 100% கைரேகை பதிவு (eKYC) பணியினை நிறைவு செய்ய மேற்கண்ட வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 230KB)