கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 22 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 14/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக எதிர்வரும் 22.08.2026 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கான அனைத்துத்துறை அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 13.08.2026 மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.