Close

பரளிக்காடு சூழல்சார் சுற்றுலா

வழிகாட்டுதல்
வகை இயற்கை / கண்ணுக்கினிய அழகு

பரளிக்காடு கோயம்புத்தூர் மாவட்டத்தின் காரமடை வனச்சரகத்தில், பில்லூர் அணைப் பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க சூழல்சார் சுற்றுலாத் தலமாகும். அடர்ந்த வனப்பகுதி, மலைகள், பில்லூர் அணையின் நீர்ப்பரப்பு மற்றும் பவானி ஆற்றின் இயற்கைச் சூழல் ஆகியவை இத்தலத்தின் முக்கிய சிறப்பம்சங்களாகும். இயற்கையுடன் இணைந்து ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியாகக் கழிக்க ஏற்ற சிறந்த சூழல்சார் சுற்றுலாத் தலமாக பரளிக்காடு விளங்குகிறது.

நேரம்

  • காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
  • சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மட்டும்.

நுழைவுக் கட்டணம்

  • பெரியவர்கள் – ₹700/- ஒரு நபருக்கு
  • வயதுக்குட்பட்ட குழந்தைகள் – ₹600/- ஒரு நபருக்கு

முக்கிய செயல்பாடுகள்

  • பரிசல் சவாரி (Coracle Ride)
  • பவானி ஆற்றில் குளியல்
  • பாரம்பரிய கலாச்சார நடன நிகழ்ச்சி
  • மதிய உணவு
  • இயற்கை மற்றும் வனப்பகுதி அனுபவம்

ஆன்லைனில் முன்பதிவு செய்ய :

https://coimbatorewilderness.com/baralikadu-booking/

(ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம்)

தொடர்பு:

+91 94899 68480

 

அடைவது எப்படி

வான் வழியாக

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் → பரளிக்காடு –60 கி.மீ.

தொடர்வண்டி வழியாக

கோயம்புத்தூர் ரயில் நிலையம் → பரளிக்காடு –50 கி.மீ.

சாலை வழியாக

காந்திபுரம் ,கோயம்புத்தூர் → பரளிக்காடு - 45 கி.மீ.