அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர், கோயம்புத்தூர் (மகளிர்), ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் அப்பேரல் தொடர்புடைய தொழிற்பிரிவுகள், டிரோன் பைலட், இன்டஸ்ட்ரிஸ் ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வெகிக்கிள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. 8 / 10 / 11 / 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி, டிப்ளமோ படித்த 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பெண்கள் இப்பயிற்சியில் சேர உச்ச வயது வரம்பு இல்லை. 15.06.2026 முதல் 14.08.2026 வரை நேரடி சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது 31.08.2026 வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.