Close

TANFINET தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதித் தகுதி தளர்வு

வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026

பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்காக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து வருகிறது.

அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில், கடந்த மூன்று நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் ₹50 லட்சத்திலிருந்து ₹20 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவு 12.08.2026 முதல் TANFINET இணையதள போர்டலில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்கள் OFC மற்றும் ONT பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், சேவை தடைகளை விரைவாக சரிசெய்தல் மற்றும் சேவை தரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

(PDF 144KB)