28.08.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 20/08/2026
கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 28.08.2026 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகிக்க உள்ளார். மாவட்ட விவசாயிகள் நேரடியாக கலந்து கொண்டு, தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து மனுக்களை அளித்து தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.