Close

ATMA திட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சியர் அறிவிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 21/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) திட்டத்தில் காலியாக உள்ள வட்டார தொழில்நுட்ப மேலாளர் (BTM) மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் (ATM) பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக தகுதியும் அனுபவமும் கொண்ட பணிநியமன முகமைகளிடமிருந்து (Recruitment Agency) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான முகமைகள் தங்களது விவரங்கள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகளை 27.08.2026க்குள் திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், தடாகம் ரோடு, ஜி.சி.டி. அஞ்சல், கோயம்புத்தூர்–13 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 306KB)