Close

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2026

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2026
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலாத் தொழில் முனைவோர் மற்றும் தங்குமிட நிறுவனங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாமிடுதல் தளம் உள்ளிட்ட 13 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத்துறை சார்ந்தவர்கள் தகுதியான விருதுகளுக்கு 30.09.2026க்குள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

25/08/2026 30/09/2026 பார்க்க (298 KB)