கோயம்புத்தூர் மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் NEET-PG தேர்வு
தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியத்தால் (National Board of Examinations in Medical Sciences) நடத்தப்படும் NEET-PG தேர்வு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 30.08.2026 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 18 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் சுமார் 4,393 தேர்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தேர்வு சீராக நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, தடையற்ற மின்சாரம் மற்றும் அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் காலை 7.00 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
தேர்வர்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு +91 79961 65333 என்ற எண்ணிலும், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தை +91 63841 23073 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.