செம்மொழிப் பூங்கா
வழிகாட்டுதல்செம்மொழிப் பூங்கா கோயம்புத்தூர் மாநகரின் காந்திபுரத்தில் அமைந்துள்ள சுமார் 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட நவீன தாவரவியல் பூங்காவாகும். பல்வேறு கருப்பொருள் தோட்டங்கள், அரிய மற்றும் பல்வகை தாவரங்கள், அழகிய நடைபாதைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் இயற்கைச் சூழலை ரசிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் இங்கு அமைந்துள்ளன. இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொழுதுபோக்கை ஒருங்கிணைக்கும் முக்கியமான நகர்ப்புற பசுமைச் சுற்றுலாத் தலமாக செம்மொழிப் பூங்கா விளங்குகிறது.
நேரம் : காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை
நுழைவுக் கட்டணம் : பெரியவர்கள் – ₹15/- & குழந்தைகள் – ₹5/-
தொடர்பு : +91-422-2390261 / 2390262 / 2390263
முகவரி : செம்மொழிப் பூங்கா, ஏ.டி.டி. காலனி, காந்திபுரம், கோயம்புத்தூர் – 641018.
அடைவது எப்படி
வான் வழியாக
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் → செம்மொழிப் பூங்கா 10 கி.மீ.
தொடர்வண்டி வழியாக
கோயம்புத்தூர் ரயில் நிலையம் → செம்மொழிப் பூங்கா 4 கி.மீ.
சாலை வழியாக
காந்திபுரம் → செம்மொழிப் பூங்கா 1 கி.மீ.