Close

டாப்செட்கோ கடன் திட்டங்களுக்கான கடன் மேளா செப்.7-ல் நடைபெறும்

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்காக குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கான கடன் மேளா 07.09.2026 அன்று காலை 10.30 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

ஆட்டுப்பண்ணை, ஹோட்டல், ஜவுளிக்கடை உள்ளிட்ட தொழில்களுக்கு தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கு சிறுதொழில் கடன் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில கல்விக் கடன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து இம்முகாமில் பயன்பெறலாம்.

தகுதியுள்ளவர்கள் சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல், புகைப்படம் மற்றும் தொழில் திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 218KB)