Close

PM-YASASVI கல்வி உதவித்தொகை – தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட தேதி : 07/09/2026

இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) மாணவர்களுக்கான PM-YASASVI கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 2026–27 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் 9–10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.75,000 வரையும், 11–12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரையும் கல்வி மற்றும் விடுதிக் கட்டணமாக வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2025–26 ஆம் ஆண்டில் உதவித்தொகை பெற்ற மாணவர்கள், 2026–27 ஆம் ஆண்டிற்கான புதுப்பித்தல் விண்ணப்பத்தை 30.09.2026க்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்களின் சரிபார்ப்புக்கான கடைசி நாள் 15.10.2026.

தகுதியான மாணவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 336KB)