கோயம்புத்தூர் மண்டல ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 11/09/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (11.09.2026), மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் உதகமண்டலம் மாவட்டங்களை உள்ளடக்கிய கோயம்புத்தூர் மண்டல ஓய்வூதியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் (Pension Adalat) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதன்மைக் கணக்குத் தணிக்கை அலுவலக துணை மாநில கணக்காயர்கள் திரு. சவுரவ் ரமேஸ் மற்றும் திரு. தொம்மிகபி ஆகியோர் ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.


