Close

குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், பொருட்களை எடுத்துச் செல்லுதல், குதிரை சவாரி, ரைடிங் பள்ளிகள், பந்தயம், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் அனைத்து குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களையும் தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தில் (TNAWB) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

குதிரை உரிமையாளர்கள் தங்களது குதிரைகளின் விவரங்களை தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, அவற்றின் நலன், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பராமரிப்பு தொடர்பான விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.

குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்கள் தங்குமிடங்களில் போதிய காற்றோட்டம், சுகாதாரம், பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பு மற்றும் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குதிரை உரிமையாளர்களும் தங்களிடம் உள்ள குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தின் இணையதளத்தில் பதிவு செய்து, விலங்கு நல விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதிவு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையை அணுகலாம் அல்லது தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 65KB)