குடும்ப அட்டைதாரர்களுக்கான e-KYC சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 17/09/2026
கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.68 சதவீதமும், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் 91.97 சதவீதமும் e-KYC பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள குடும்ப உறுப்பினர்களின் e-KYC பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 19.09.2026 அன்று சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
எனவே, இதுவரை e-KYC பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள், அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று கைரேகையைப் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.