Close

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் 22.09.2026 முதல் 23.09.2026 வரை நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2026

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் 22.09.2026 முதல் 23.09.2026 வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டத் துறைத் தலைமை அலுவலர்கள் பொள்ளாச்சி வட்டத்தின் 65 வருவாய் கிராமங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற உள்ளனர்.

மேலும், 22.09.2026 அன்று மாலை 4.00 மணியளவில் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் நேரில் மனு அளிக்கலாம். இவ்வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 53KB)