Close

2026ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2026

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் வகையில், 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 2026ஆம் ஆண்டிற்கும் வழங்கப்பட உள்ளது.

இவ்விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய சாதனையாளர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம்.

விண்ணப்பத்துடன் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக மேற்கொண்ட பணிகள் மற்றும் அதற்கான ஆவணங்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20.10.2026.

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 60KB)