கோயம்புத்தூரில் சமுதாய வளைகாப்பு விழா – மாண்புமிகு அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் பங்கேற்பு
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2026
கோயம்புத்தூர் மாவட்டம், கணபதி, மணியகாரன்பாளையம், ஸ்ரீ கிருஷ்ண கவுண்டர் கல்யாண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இன்று (25.09.2026) நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் தொடங்கி வைத்து, 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு கலவை சாதங்களை பரிமாறினார்.

