Close

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான குறைகளை தெரிவிக்க மாவட்ட குறைதீர்வு அலுவலர் நியமனம்

வெளியிடப்பட்ட தேதி : 25/09/2026

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் அவர்களின் ஆணைப்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத ஊரக இயக்கம் (VB-GRAM) / மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) தொடர்பான பொதுமக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள திரு. சி. மனோகரன் அவர்கள் மாவட்ட குறைதீர்வு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் தங்களது குறைகளை கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நேரிலோ, 9600366935 / 9443357569 என்ற அலைபேசி எண்களிலோ அல்லது cbevbgramg@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம்.

இத்தகவலை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (VB-GRAM) / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 304KB)