குடும்ப அட்டைதாரர்களுக்கு e-KYC கைரேகைப் பதிவு – செப்டம்பர் 26-ஆம் தேதி சிறப்பு முகாம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி, முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை சரிபார்க்கும் வகையில், மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கைரேகை அடிப்படையிலான e-KYC பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.68% மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் 92.11% e-KYC பதிவு நிறைவு பெற்றுள்ளது.
மீதமுள்ள குடும்ப உறுப்பினர்களுக்காக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 26.09.2026 அன்று சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. e-KYC பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள் தங்களது குடும்ப அட்டை தொடர்புடைய நியாய விலைக் கடை அல்லது அருகிலுள்ள நியாய விலைக் கடைக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 100% e-KYC பதிவு நிறைவு செய்ய பொதுமக்கள் இச்சிறப்பு முகாமை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.