கோயம்புத்தூரில் 39 மையங்களில் TNPSC Group-I முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்–I (Group-I) முதல் நிலைத் தேர்வு 27.09.2026 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 39 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் 11,400 தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
தேர்வு சுமூகமாக நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு, போக்குவரத்து, தடையற்ற மின்சாரம் மற்றும் அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வர்கள் காலை 9.00 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டும். அதன்பிறகு எந்த காரணத்திற்காகவும் அனுமதி இல்லை. தேர்வு அறிவிக்கையில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது.
தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 18004190958, 044-69097777, 044-25300338, 044-25300339, 044-25300340 ஆகிய எண்களிலும், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தை 6384123073 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.