Close

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடல்

வெளியிடப்பட்ட தேதி : 29/09/2026

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் (FL1), பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் (FL2), நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் (FL3), தமிழ்நாடு ஹோட்டல் (FL3A), சுற்றுலாத்துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள் (FL3AA) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் உரிமத்தளங்கள் (FL11) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களும் 02.10.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மூடப்பட்டிருக்க (Dry Day) உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்கள் விற்பனை செய்தல், மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல் அல்லது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம், 1937-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 411KB)