கோயம்புத்தூரில் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் பேருந்து சேவைகளை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 02/10/2026
PR.NO.06 - VETRI PAYANATHITTAM - INAUGURATION 002

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று (02.10.2026) ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, கோயம்புத்தூர், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்ட மகளிருக்கு இனிப்புகளை வழங்கி, இலவச பயணச்சீட்டுகளையும் வழங்கினார்.

(PDF 73KB)

PR.NO.06 - VETRI PAYANATHITTAM - INAUGURATION 001

PR.NO.06 - VETRI PAYANATHITTAM - INAUGURATION 002