விடுபட்ட மற்றும் முதல் முறையாகத் தகுதி பெற்ற வாக்காளர்களின் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள்
இந்திய தேர்தல் ஆணையத்தின் 29.09.2026 தேதியிட்ட அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 10 சட்டமன்றத் தொகுதிகளிலும், தொடர் வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் பணியின் கீழ், வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள தகுதியான வாக்காளர்கள் மற்றும் இளம்/முதல் முறையாகத் தகுதி பெற்ற வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் 01.10.2026 அன்று காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
எனவே, தகுதியான அனைத்து வாக்காளர்களும் இவ்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.