தீத்திபாளையத்தில் அக்டோபர் 14-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 02/10/2026
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், தீத்திபாளையம் கிராமம், புதுரோட்டில் அமைந்துள்ள லோட்டஸ் மஹாலில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 14.10.2026 அன்று காலை 10.30 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, 06.10.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில், அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில், வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) மற்றும் பேரூர் வட்டாட்சியர் ஆகியோர் தீத்திபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற உள்ளனர்.
எனவே, தீத்திபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.