ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறித்தவர்களுக்கு மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு
நடப்பு ஆண்டில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறித்தவ பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும், மொத்தம் 600 பயனாளிகளுக்கு மானியம் ECS முறையில் நேரடியாக வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும், அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 31.01.2027-க்குள் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.