கோயம்புத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய முன்னாள் பயிற்சியாளர்கள் அசல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள அறிவிப்பு
கோயம்புத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2018 முதல் 2023ஆம் ஆண்டு வரை பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்கள், இதுவரை பெற்றுக்கொள்ளாமல் உள்ள மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ்களின் அசல் பிரதிகளை 30.10.2026க்குள் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சான்றிதழ்களைப் பெற வரும் பயிற்சியாளர்கள், பயிற்சி பெற்றதற்கான ஆதாரமாக அடையாள அட்டை அல்லது கட்டணம் செலுத்திய இரசீதை தவறாமல் கொண்டு வர வேண்டும். வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், அவை அரசு ஆவணக் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். அதன்பின்னர், சான்றிதழ்களைப் பெற விரும்புவோர் சென்னையில் உள்ள அரசு ஆவணக் காப்பகத்திற்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் விவரங்களுக்கு 0422-2965533 / 2965534 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.