கோயம்புத்தூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் கண்காட்சி
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில், 08.10.2026 முதல் 10.10.2026 வரை பொள்ளாச்சி கோவில்பாளையத்தில் உள்ள M/s. Roots Industries Pvt. Ltd. நிறுவனத்தில் கார்ப்பரேட் பஜார் நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் 40 அரங்குகளில் மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மூலிகைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், சிறுதானிய தின்பண்டங்கள், எண்ணெய் வகைகள் மற்றும் நெய் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன.
எனவே, பொதுமக்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.