தொண்டாமுத்தூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கல்லூரி சந்தை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில், 09.10.2026, 10.10.2026 மற்றும் 12.10.2026 ஆகிய தேதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, தொண்டாமுத்தூரில் உள்ள ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லூரியில் கல்லூரி சந்தை நடைபெற உள்ளது.
இச்சந்தையில் 40-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, கைவினைப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மூலிகைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், சிறுதானிய தின்பண்டங்கள், எண்ணெய் வகைகள் மற்றும் நெய் உள்ளிட்ட பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய உள்ளனர்.
பொதுமக்கள் இச்சந்தையில் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.