கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
கோயம்புத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு, ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த தகுதியுள்ள கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடத்திற்கான ஊதிய விகிதம் ரூ.15,900–50,400 (நிலை–2) ஆகும். இப்பணியிடம் ஆதிதிராவிடர் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 100% பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக (VI), எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 40 வயதிற்குட்பட்டவராகவும், நாற்காலி தொடர்பான பணியில் ஓராண்டு அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை (பதிவு செய்திருந்தால்), ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ், தேசிய அடையாள அட்டை (NIDC), தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (UDID), ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 21.10.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.