அன்னூர் வட்டத்தில் நடைபெறவிருந்த “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 21/10/2026

தமிழ்நாடு அரசு சார்பில் மக்களை நேரடியாக அணுகி குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்  திட்ட முகாமானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் மாதந்தோறும் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாதத்திற்கான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமானது வருகிற 22.10.2026 ஆம் தேதி  காலை 9 மணி முதல் 23.10.2026 ஆம் தேதி காலை 9 மணி வரை அன்னூர் வட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இந்த முகமானது நிர்வாக காரணங்களினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர்  இ.ஆ.ப., அவர்களால்  தெரிவிக்கப் பட்டுள்ளது.

(PDF 46KB)