குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களுக்கான முன்மாதிரியான சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில் வழங்கப்படும் “முன்மாதிரியான சேவை விருதுக்கு” கோயம்புத்தூர் மாவட்டத்தில் தகுதியுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளைஞர் நீதிச் சட்டம், 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் செயல்பட்டு வருவதுடன், நிறுவனம் மற்றும் அதன் பணியாளர்கள் மீது உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லாத நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
நான்கு பிரிவுகளில் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் நகல்களுடன் 28.10.2026 அன்று மாலை 5.30 மணிக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் 32, இரண்டாவது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயம்புத்தூர் – 641018 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். காலதாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.