முதலமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் – புதிய விண்ணப்பங்கள் மற்றும் முதிர்வுத் தொகை பெற அறிவிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 23/10/2026

முதலமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற, குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பெற்றோரில் ஒருவர் 49 வயதிற்குள் இருக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தைக்கு ரூ.50,000 மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 வைப்புநிதிப் பத்திரமாக வழங்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் 18 வயது நிறைவடைந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அல்லது தோல்விக்கான மதிப்பெண் சான்றிதழைப் பெற்றிருந்தால், வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகையைப் பெறலாம்.

முதிர்வுத் தொகை பெறத் தகுதியுடைய பயனாளிகள் தங்களது விவரங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் சரிபார்த்து, வைப்புநிதிப் பத்திரம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தக நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகம் அல்லது நகர்ப்புற மண்டல அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் / மகளிர் ஊர்நல அலுவலரிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

(PDF 242KB)