கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்–IV தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 23.10.2026 முதல் தொடக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியின் அடிப்படையில் 6,574 காலிப்பணியிடங்களுக்கான குரூப்–IV தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் 05.11.2026 ஆகும். மேலும் விவரங்களுக்கு https://tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் TNPSC குரூப்–IV தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 23.10.2026 முதல் தொடங்கப்பட உள்ளன. பயிற்சியில் பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன், வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.
பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் அருகிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 9499055937 / 0422-2642388 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.