கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவம்பர் 1, 2026 அன்று TNPSC குரூப்-2 மற்றும் 2A முதல்நிலைத் தேர்வு நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–II (குரூப்-2 மற்றும் 2A) முதல்நிலைத் தேர்வு, 01.11.2026 அன்று காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 44 பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 73 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வில் 20,980 தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

தேர்வர்கள் காலை 09.00 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். நுழைவுச்சீட்டு, கருப்பு நிறப் பந்துமுனைப் பேனா மற்றும் அரசால் வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள ஆவணம் ஆகியவற்றை மட்டுமே கொண்டுவர வேண்டும். டிஜிட்டல் கடிகாரங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு முழுவதும் கருப்பு நிறப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 419 0958 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது 044-69097777, 044-25300338, 044-25300339, 044-25300340 ஆகிய எண்களையோ தொடர்புகொள்ளலாம். கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தை 6384123073 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 227KB)