உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலா பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
கோயம்புத்தூர் மாநகராட்சி, செம்மொழிப் பூங்காவில், 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வமூட்டும் விதமாக, உயர்கல்வி வழிகாட்டித் திட்ட கல்லூரி களப்பயண நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைக்கும் வகையில் இன்று (02.11.2026) கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.